அழகான வண்ணமயமான கோலங்களை மிகவும் எளிதாக வரைய உதவும் ஒரு பயன்பாடு ஆகும்.
நிலா கோலங்கள் - அழகான வண்ணமயமான கோலங்களை மிகவும் எளிதாக நீங்களே வரைய உதவும் ஒரு பயன்பாடு ஆகும். மிக சில நிமிடங்களில் உங்கள் எண்ணத்தில் தோன்றும் கோலங்களை வண்ணத்தில் உருவாக்கலாம்.
கோலங்களின் புள்ளிவரிசையையும் வகையினையும் தேர்வு செய்தபின், வரை பலகையில் தோன்றும் புள்ளிகளை நேர் வரிசையில் இணைத்தால் அழகான கோலங்கள் உருவாகும். இதிலுள்ள நிறப்பலகையில் தேவையான நிறங்களை தேர்வு செய்து பல வண்ணங்களில் கோலங்களை அழகுபடுத்தலாம்.
இந்த பயன்பாட்டில் புள்ளி கோலங்களை எளிதாக உருவாக்கலாம். கோலங்களின் படத்தை தங்கள் படத்தொகுப்பில் சேமித்துக்கொள்ளலாம். நீங்கள் வரைந்த கோலங்களை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
தேவைப்படும் நிலையில் ஏற்கனவே வரைந்த கோலங்களை மாற்றியைத்துக்கொள்ளலாம்.