We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

このPonniyin Selvan Tamil - eBookについて

அமரர்கல்கிஇரா。 கிருஷ்ணமூர்த்திஅவர்களின்௮ாவல்

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம். சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை - அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று!

இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.

Ponniyin Selvan would be a great gift for everyone in this world.

Ponniyin Selvan in Tamil - Kalki R. Krishnamoorthy

Enjoy the Reading.

App Feature:

* Can read this book Offline. No internet required.

* Easy Navigation between Chapters.

* Adjust font size.

* Customised Background.

* Easy to Rate & Review.

* Easy to share App.

* Options to find more books.

* Small in app size.

* Easy to use.

最新バージョン 2.0 の更新情報

Last updated on 2023年01月21日

அமரர் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நாவல் "பொன்னியின் செல்வன்" (Ponniyin Selvan in Tamil)

翻訳中...

アプリの追加情報

最終のバージョン

Ponniyin Selvan Tamil - eBook 更新を申請する 2.0

投稿者

Wiwik Simalakama

Android 要件

Android 5.0+

Available on

Ponniyin Selvan Tamil - eBook をPlayストアでダウンロード

もっと見る

Ponniyin Selvan Tamil - eBook スクリーンショット

言語
APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
購読完了!
APKPureの購読が完了しました。
APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
成功!
ニュースレターを購読しました。