An pembelajaran berasaskan mudah Permainan untuk Tamil Epic Thirukkural - Thirukkural Permainan
தமிழின் பெருமைமிக்க நூலான, உலகம் போற்றும் திருக்குறளை தமிழர்கள் யாவரும் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திருக்குறளை அதன் பொருளுடன் எளிதாக கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 1330 குறள்களும் இவ்விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவர், ஆசிரியர், பேராசிரியர் ஆகிய மூன்று நிலைகளில் 1330 குறள்களும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்விளையாட்டில் ஒவ்வொரு நிலையிலும் குறள்கள் தொடர்பில்லாத வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு குறளின் ஏழு வார்த்தைகள் விளையாட்டுத்தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்.
விளையாட்டுத்தளத்தின் கீழே உள்ள பெட்டிகளில் நகரும் வார்த்தைகளை வரிசையாக சேர்க்கவேண்டியதே இவ்விளையாட்டின் நோக்கமாகும்.
நகரும் வார்த்தையை விரலால் அழுத்தி, பெட்டிகளின் மேல் இழுத்து விடும்போது அப்பெட்டியில் அந்த வார்த்தை சேர்க்கப்பட்டுவிடும்.
சேர்ந்த பெட்டியை ஒருமுறை தொடும்போது அதிலுள்ள வார்த்தை மீண்டும் கலைந்து நகரும். வலப்புறம் கீழே உள்ள சிவப்புநிற பொத்தானை அழுத்தி அனைத்து பெட்டிகளிலும் உள்ள வார்த்தைகளையும் கலைக்கமுடியும்.
ஒவ்வொரு குறளுக்கும் 3 உதவிகள் வழங்கப்படும். மேலும் உதவிக்கு இணையத்தள உதவியை கோரலாம்.
-Thirukkural Permainan