Используйте приложение APKPure
Историческую версию தமிழ் குரான் можно получить на Android
Свободный перевод Священного Корана на тамильский.
மனிதகுலத்திற்கான தெய்வீகமான, உலகளாவிய செய்தியை கொண்ட கொரானை கண்டறியுங்கள், இப்பொழுது உங்கள் மொழியில், இலவசமாக!
இந்த செயலியின் மூலம், தாங்கள் பரிசுத்த குரானை தமிழில் படிக்கவும் மற்றும் இலவசமாக உங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
குரான், கொரான் என்பது முஸ்லீம்களின் புனிதமான புத்தகம், இந்த புத்தகம், தீர்க்கதரிசி முஹம்மத்திடம் வெளிப்படுத்திய தேவனுடைய (அல்லாஹ்) வார்த்தையை கொண்டிருக்கிறது.
கொரான் என்ற வார்த்தை அரபு அல்-குரானிலிருந்து வருகிறது, அதற்கு 'பாராயணம்' அல்லது 'புனித உரை ஓதுதல்' என்பது பொருள். முஹம்மத் இந்த வெளிப்பாடுகளை பெற்று அதை வாய்வழியாக பரவ செய்தார். 632 ஆம் ஆண்டு, அவரது மறைவிற்குப் பின், அவரது ஆதரவாளர்கள் இந்த உரைகளை குழுமி இன்று நாம் அறியும் இந்த புத்தகத்தை தொகுத்தனர்.
குரான் முஸ்லீம்களின் கொள்கையையும், சட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இது ஒவ்வொரு முஸ்லீமின் நம்பிக்கைக்கான மூலம். இது உயிரினங்களோடு கடவுளுக்கு உள்ள தொடர்பை குறிக்கிறது, மேலும் ஒரு நியாயமான சமூகம் மற்றும் ஒரு சரியான மனித நடத்தை ஆகியவற்றை கல்வியின் மூலம் எய்த ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. குரான், அதன் அழகு , அதன் கவிதைத்துவம் மற்றும் அதன் இலக்கிய நிறைவு, அவற்றிற்காக வெளிக்கோடிடப்படுகிறது.
குரானின் தனிப்பட்ட பாணி, அதன் தெய்வீக தோற்றத்தை நிரூபிக்கிறது, நம்பிக்கை இருந்தாலும், இல்லா விட்டாலும், இந்த நூல் புத்திமான்களை தொடர்ச்சியாக வியக்க வைக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் மனப்பாடம் செய்யும் நூலாக இது திகழ்கிறது.
குரானின் அசலான படிவம் அரபு மொழியில் எழுதப்பட்டது, பின்னர் அது வெவ்வெறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. முதன்முதலாக 1143 ஆம் ஆண்டு, லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்பொழுது, இந்த புனித நூலினை தமிழ் மொழியினிலே நீங்கள் படித்து மகிழலாம்.
இந்த புனித குரான், 'ஸூரா' என்று அழைக்கப்படும் தனித்தனி அத்தியாயங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் வசனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
114 ஸூராக்கள்:
1 தோற்றுவாய், 2 பசு மாடு, 3 இம்ரானின் சந்ததிகள், 4 பெண்கள், 5 உணவு மரவை, 6 கால்நடைகள், 7 சிகரங்கள், 8 போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள், 9 மனம் வருந்தி மன்னிப்பு தேடுதல், 10 ஜோனா, 11 ஹுட், 12 ஜோசப், 13 இடி 14 அப்ரஹிம், 15 மலைப்பாறை, 16 தேனீ, 17 இரவுப் பயணம், 18 குகை, 19 மேரி, 20 ட-ஹா, 21 நபிமார்கள், 22 யாத்திரை, 23 விசுவாசிகள், 24 பேரொளி, 25 பிரித்தறிவித்தல், 26 கவிஞர்கள், 27 எறும்பு, 28 கதைகள், 29 சிலந்தி, 30 ரோமானியப் பேரரசு, 31 லுக்மான், 32 சிரம் பணிதல், 33 சதிகார அணியினர், 34 ஷேபா, 35 படைப்பவன், 36 யா சின், 37 அணிவகுப்புகள், 38 'சாட்' கடிதம், 39 கூட்டங்கள், 40 ஈமான் கொண்டவர், 41 விரிவான விளக்கம், 42 கலந்தாலோசித்தல், 43 பொன் அலங்காரம், 44 புகை, 45 முழந்தாளிடுதல், 46 மணல் திட்டுகள், 47 முஹம்மது, 48 வெற்றி, 49 அறைகள், 50 'குவாப்' கடிதம், 51 புழுதியைக் கிளப்பும் காற்றுகள், 52 மலை, 53 நட்சத்திரம், 54 சந்திரன், 55 அளவற்ற அருளாளன், 56 மாபெரும் நிகழ்ச்சி, 57 இரும்பு, 58 தர்க்கித்தல், 59 அஞ்ஞாதவாசம், 60 பரிசோதித்தல், 61 அணிவகுப்பு, 62 வெள்ளிக் கிழமை, 63 நயவஞ்சகர்கள், 64 நஷ்டம், 65 விவாகரத்து, 66 விலக்குதல், 67 ஆட்சி, 68 எழுதுகோல், 69 நிச்சயமானது, 70 உயர்வழிகள், 71 நூஹ், 72 ஜின்கள், 73 போர்வை போர்த்தியவர், 74 போர்த்திக்கொண்டிருப்பவர், 75 மறுமை நாள், 76 காலம், 77 அனுப்பப்படுபவை, 78 பெரும் செய்தி, 79 பறிப்பவர்கள், 80 கடு கடுத்தார், 81 சுருட்டுதல் 82 வெடித்துப் போதல், 83 அளவு நிறுவையில் மோசம் செய்தல், 84 பிளந்து போதல், 85 கிரகங்கள், 86 விடிவெள்ளி, 87 மிக்க மேலானவன், 88 மூடிக் கொள்ளுதல், 89 விடியற்காலை, 90 நகரம், 91 சூரியன், 92 இரவு, 93 முற்பகல், 94 விரிவாக்கல், 95 அத்தி, 96 இரத்தக்கட்டி, 97 கண்ணியமிக்க இரவு, 98 தெளிவான ஆதாரம், 99 அதிர்ச்சி, 100 வேகமாகச் செல்லுபவை, 101 திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி, 102 பேராசை, காலம், 104 புறங்கூறல், 105 யானை, 106 குறைஷிகள், 107 அற்பப் பொருட்கள், 108 மிகுந்த நன்மைகள், 109 காஃபிர்கள், 110 உதவி, 111 ஜுவாலை, 112 ஏகத்துவம், 113 அதிகாலை, 114 மனிதகுலம்.
குரானை படிக்க அனைவரையும் அழைக்கிறோம்!
இப்போதே பதிவிறக்கம் செய்து, முஸ்லீம்களின் புனித நூலினை தமிழில் படித்து மகிழுங்கள்!
Last updated on 05/11/2017
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Загрузил
Dalila Silva
Требуемая версия Android
Android 4.0.3+
Категория
Жаловаться
தமிழ் குரான்
2.0 by QURAN
05/11/2017