ที่ดีที่สุดสำหรับผู้ที่ชื่นชอบกีฬากอล์ฟ, ผู้เล่นตัวจริง, ผู้เล่นตัวจริง
சேற்றில் மனிதர்கள் (பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)
எழுதியவர்: ராஜம் கிருஷ்ணன்
வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அழகாக உணர்த்தியுள்ளார். விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் 'தொழில்' என்றே பொருள்படுவதாக இருந்தாலும், தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய புதுயுகக் கவிஞன் பாரதி போற்றினான். 'நாங்கள் சேற்றிலே கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்' என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது. இவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது.
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com