மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் ஸ்வாமி அவர்கள் சரித்திரம் படைத்ததாலேயே மாமகரிஷி ஆனார்.
இரசமணி சித்தர் முற்பிறப்பில், இராமாயண காலத்தில் வால்மீகி மகரிஷி மகாபாரதத்தில் கிருஷ்ணாவதாரம், அபிராபி அந்தாதி அருளிய அபிராமிப்பட்டர். அரசனாகவும், ஆண்டியாகவும் பலப்பல அவதாரம் எடுத்தவர். கர்ம வினைகளை கரைக்கக் கூடிய நட்சத்திர ஆலயம். சுவாசத்தை விசுவாசமாக்கும் ஆலயம். மாமகரிஷி சித்தர் ஈஸ்வராய குருதேவருடன் தொடர்புகொண்டு உங்களாலும் பேச முடியும்.
ரசமணி சித்தர் அருளியவை எந்தக் காரியங்கள் நீங்கள் தொடங்குவதாக இருந்தாலும், எத்தனை சிக்கலை நீங்கள் அனுபவித்தாலும் எத்தனை கடுமையான நிலைகளைச் சந்தித்தாலும் உங்கள் நெற்றிப்பொட்டில் புருவ மத்தியில் சிந்தித்தால் இருள் அகலும். மருள் விலகும். உயிரே கடவுள்; உடலே ஆலயம்; உணவே மருந்து;
கோள்களில் உயர்ந்தது சூரியன், உயிரினங்களில் உயர்ந்தது மனிதன், ஆனால் மனிதன் தன்னையும் உணராமல் தான் சார்ந்த இயற்கையையும் உணராமல் இருக்கின்றான். தாவர இனமானது தான்சார்ந்த இனத்தின் குணத்தை மட்டுமே எந்த நாளும் எடுக்கும் தன்மை உடையது. அந்த தன்மையை மட்டுமே தாவரங்கள் கொண்டிருக்கும். புளிய மரம் புளியமரத்தின் தன்மையையும், அவரை கொடி, அவரை கொடியின் தன்மையையும், ரோஜா செடி ரோஜாவின் தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்தும்.
ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டுமே நம்முடைய உயர்ந்த நிலையை புரிந்து கொள்ளாமல் அறிந்துகொள்ளாமல் விலங்குகள் குணத்தையும் தாவரங்கள் குணத்தையும் தன்னுள் இருந்து வெளிப்படுத்தி வெளிப்படுத்தி தன்னைத்தானே இழி நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறோம். அப்படிப்பட்ட இழி நிலையில் இருந்து விலகி வேதனைகள் தாண்டி சாதனைகள் படைத்த மகான்கள் போல் வாழ இனிய வழியினை மகரிஷிகள் கூறுகின்றார்கள்.
மகரிஷிகள் மனிதர்களையும், மாமனிதர்களாக மாற்றும்
முயற்சியினை பயிற்சியினை காலம்காலமாக அருளிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை உணர்ந்து நாமும் அருள் ஒளியை நோக்கி பயணிப்போம். அப்பொழுது புதிய பாதை புலப்படும். அருள் ஒளியில் கலந்திடுவோம். அருட்பெருஞ்ஜோதி ஆகிடுவோம். வரலாறு என்பது வாழ்ந்தோம் சென்றோம் என்று இல்லாது சரித்திரம் படைத்ததாக இருக்க வேண்டும்.
சரித்திரம் என்பது சாதனையால் வருவது. அப்படிப்பட்ட பல சாதனைகளைப் புரிந்தவர் மகரிஷி. சாதனைகளை புரிந்தவர்கள் மட்டுமே வரலாற்றில் சரித்திரம் படைத்தவர்களாக ஆக முடியும்.
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் ஸ்வாமி அவர்கள் சரித்திரம் படைத்ததாலேயே மாமகரிஷி ஆனார். அவர்கள் வாழ்க்கை வரலாறு கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். அவர் புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கும் புகைப்படத்தை வீட்டில் வைத்திருப்போருக்கும் அவருடைய அருளாசி என்றும் துணை இருக்கும். மற்றவர்களின் துன்பத்தைப் போக்கி மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.
சரித்திரம்
- நதி மூலம் ரிஷி மூலம் காண்பது என்பது தேவையற்ற ஒன்று. ஏனென்றால் அவர்கள் பல பிறவிகள் வாழ்ந்து பல சாதனைகள் படைத்து கர்மாக்களைக் கழித்து பல ஜென்மங்கள் பயணித்து பலரையும் வழி நடத்துபவர்களாக இருப்பதால் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க வேண்டாம் என்பார்கள்.
மக்கள் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அருளாசி பெற்று, அவரது அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட,நாங்கள் தியானிக்கின்றோம். தவம் இயற்றுகின்றோம்.