திருவாசகம் - திருக்கோவையார்


1.1 oleh Bharani Multimedia Solutions
Sep 5, 2019

Mengenai திருவாசகம் - திருக்கோவையார்

திருவாசகம் - திருக்கோவையார் (Thiruvasakam -Thirukkovaiyar)

திருவாசகம் - திருக்கோவையார்:

அருளியவர்: ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

திருவாசகம் சைவ சமயம் வழி வாழும் மக்களால் ஒரு தெய்வ நூல் என்றே போற்றப்படுகிறது. இன்றும் இந்தத் தெய்வ நூலைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. "திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது சான்றோர் சொல். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை வழங்கி மறைந்தார். மறைந்த இறைவனை மீண்டும் பெறவேண்டி மனம் உருகி உருகிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இந்துக்கள் வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். சைவ சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாங்கள் திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள். முதல் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.

திருக்கோவையார் சைவ சமயம் வழி பின்பற்றும் மக்களால் ஒரு தெய்வ நூலாகவே காணப்படுகிறது. இன்றும் இந்தத் தெய்வ நூலைப் மற்ற திருமுறை நூல்களுடன் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. ஒரு முறை சிவபெருமான் மாணிக்கவாசகரிடம், "பாவைப் பாடிய வாயால், கோவைப் பாடுக!", என்று சொன்னார். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, அதை ஈசனே தன் கரங்களால் ஏட்டில் எழுதினார். மாணிக்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இந்துக்கள் வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். சைவ சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாங்கள்

திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள். முதல் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. இதை திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை) பரையாகவும், சித்தரிக்கப் பட்டுள்ளனர்.

Pemaju:

Penyelesaian Multimedia Bharani

Chennai - 600 014.

E-mel: bharanimultimedia@gmail.com

Apa yang baru dalam versi terkini 1.1

Last updated on Mar 12, 2019
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய "திருவாசகம்" மற்றும் "திருக்கோவையார்" - எட்டாம் திருமுறை

Maklumat APLIKASI tambahan

Versi Terbaru

1.1

Dimuat naik oleh

Claudia Martinez

Memerlukan Android

Android 4.1+

Available on

Laporkan

Tandai sebagai tidak sesuai

Tunjukkan Lagi

திருவாசகம் - திருக்கோவையார் Alternatif

Dapatkan lebih banyak daripada Bharani Multimedia Solutions

Cari